அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படையினரால் ஈரானில் நடத்தப்படும் அனைத்து மிலேச்சத்தனமான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது நடைபெற்று வருகின்ற இந்த யுத்தம் காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறுபட்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதனால் பல்வேறு அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.
அதேநேரம் சவூதி அரேபியா, கட்டார், உள்ளிட்ட ஏனைய அரபு நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது அவை கண்டிக்கத்தக்கதாகும். பஹ்ரைன்,ஜோர்தான்,டுபாய், குவைத் ,அபுதாபி ,ஓமான் உள்ளி்ட்ட மத்திய கிழக்கு நாடுகளும் இப்போரினால் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகெங்கிலும் இருந்து தொழிலுக்காக சென்ற இலட்சக்கணக்கான மக்கள் அங்கே பணியாற்றி வருவதோடு இரண்டு புனிதத் தலங்களையும் கருத்திற்கொண்டு ஈரான் செயற்படவேண்டும்.
எனவே சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மேற்கொள்கின்ற தாக்குதல் பற்றி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதுடன் அமைதிக்கான சூழலை உருவாக்கி போரை நிறுத்த இரண்டு தரப்பினரும் முன்வர வேண்டும்.
ஈரானில் நடத்தப்படும் மிலேச்சத்தனமான அனைத்து தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் - காதர் மஸ்தான்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space