இந்திய தயாரிப்புகளில் தரத்திற்கு முன்னுரிமை அளிப்போம் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் (மன் கி பாத்) நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஒலிபரப்பானது.
அதில் பிரதமர் மோடி உரையாற்றியபோது,
அன்பான நாட்டு மக்களுக்கு வணக்கம். இது 2026-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி. நாளை ஜனவரி 26-ம் திகதி நாம் அனைவரும் குடியரசு தின விழாவை கொண்டாடுவோம். நமது அரசியலமைப்பு சட்டம் இந்த நாளில் தான் நடைமுறைக்கு வந்தது.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும். இப்பொழுது தரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது.
நேற்றையதை விட இன்று சிறந்த தரமாக இருக்க வேண்டும். நாம் எவற்றையும் எல்லாம் தயாரிக்கிறோமோ அவற்றை தரமாக தயாரிக்க வேண்டும். இந்திய பொருட்கள் என்றால் உயர்வான தரம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அது நமது ஆடை, தொழில்நுட்பம், மின்னணுவியல் அல்லது பேக்கேஜிங் கூட தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது. இதன் மூலம் மட்டும் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தயாரிப்புகளில் தரத்திற்கு முன்னுரிமை அளிப்போம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space