ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் விரைவில் இயற்றப்படும் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு நாள் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.பிறகு செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்ததன் விளைவாகத்தான் இமானுவேல் சேகருனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.கே.என்.பாட்ஷாவின் அறிக்கையை பெற்றுக் கொண்ட பின்னர் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனி சட்டம் விரைவில் இயற்றப்படும், என்றார் அமைச்சர் வன்னியரசு.