வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ இன்று திங்கட்கிழமை (05) அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் முதன்முறையாக ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வெனிசுவெலா தலைநகர் காரக்கஸ் மீது திடீரென தாக்குதல் மேற்கொண்டு சனிக்கிழமை (03) அதிகாலை அமெரிக்கப் படைகளால் வெனிசுலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது போதைப்பொருள் பயங்கரவாத சதி மற்றும் கொக்கைன் இறக்குமதி சதி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டவுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நண்பகலில் நியூயோர்க் நகரில்  மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஆல்வின் கே. ஹெல்லர்ஸ்டீன் முன் நடைபெற உள்ளது.

மதுரோவின் மனைவி சிலியா புளோரஸும் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் மீதும்  கொக்கைன் இறக்குமதி சதி உள்ளிட்ட  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.