அமெரிக்காவின் கலராடோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை (30) மலை ஏற்றத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் 1999ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலையேறுபவர்கள் குழு ஒன்று, அந்தப் பெண்ணின் உடலை ஒரு தொலைதூரப் பாதையில் கண்டெடுத்தனர். அந்த பெண்ணின் அருகில் ஒரு சிங்கமும் இருந்தது. தாக்குதலில் ஒன்று அல்லது பல விலங்குகள் ஈடுபட்டனவா என்பது தெரியவில்லை என அந்நாட்டு வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலை சிங்கங்கள், பூமாக்கள், கூகர்கள், கேட்டமவுண்ட்ஸ் அல்லது பாந்தர்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன, அவை வட அமெரிக்கா முழுவதும் காணப்படுகின்றன.
ஆனால் இப்போது பெரும்பாலும் 15 மேற்கத்தேய மாநிலங்களில் காணப்படுகின்றன என ர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.