இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் உருவச்சிலை இன்றையதினம் மாவிட்டபுரத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மாவை சேனாதிராஜா மறைந்த முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி ஆகியோர் இணைந்து உருவச் சிலையை திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதர் சாய் முரளி, மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள், மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அமரர். மாவை சேனாதிராசாவின் திருவுருவச்சிலை திறப்பு விழா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space