யாழ்ப்பாணத்திற்கு ஒரு சில பௌத்தர்கள் வருவது ஆன்மீகரீதியான விடயங்களுக்கு அல்ல, இனவாதத்தை பரப்புவதற்கு என்று அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழில் கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு முதுகெலும்பு உள்ளது , யாழில் தைரியத்துடன் பேசிய ஒரே ஜனாதிபதி இவர் தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பேசியுள்ளார்.

இதேவேளை, தம்புத்தேகமவில் நடைபயிற்சி செய்யாதவர், ஏன்  யாழில் வந்து நடைபயிற்சி செய்தார் என்று நாங்கள் கேட்டால் இனவாதம் என்று கூறுவார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவர்கள் இருவருக்கிடையிலேயே ஒரு முரண் காணப்படுகின்றது.